MGR க்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தீங்க? 34 வருடங்கள் கழித்து தோண்டி எடுக்கும் ஆணையம்... வசமாக சிக்கும் அப்பல்லோ ரெட்டி!!

By sathish kFirst Published Oct 11, 2018, 1:50 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் உயிரிழந்தார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா, சசிகலா தொடர்புடையவர்கள் பலர் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தின் வளையத்தில் உள்ளனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர். சிகிச்சை குறித்த ஆவணங்களைத் தங்களிடம் சமர்ப்பிக்குமாறு, ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அப்போல்லோ மருத்துவமனையில் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதன் பிறகு, எம்.ஜி.ஆர். மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். எம்.ஜி.ஆரை அமெரிக்கா அழைத்து செல்லும் முடிவை எடுத்தது யார்? என்றும், ஜெயலலிதாவுக்கு ஏன் அதுபோல் வெளிநாட்டு சிகிச்சை அளிக்க முன்னெடுக்கவில்லை என்பதன் அடிப்படையிலேயே, 34 வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஆவணங்களை கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆருக்கு மூச்சுதிணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் கிட்னி பாதிப்பு உள்ளதாக சோதனையில் தெரியவந்ததை அடுத்து அதற்கான உத்தரவை அப்போதைய சுகாதார துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஹண்டே பிறப்பித்தார். அதேநேரத்தில், பிரதமராக இருந்த இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். சிகிச்சையில் கவனம் செலுத்தியுள்ளார். 

அப்போலோ வந்த இந்திராகாந்தி, எம்.ஜி.ஆரை நேரில் விசாரித்து, சிறப்பு ஆம்புலன்ஸ் மூலமாக அமெரிக்கா கொண்டு செல்ல உத்தரவிட்டார். அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர்., அனுப்பி வைக்கப்பட்டதற்கு மத்திய அரசின் விசேஷ அக்கறையே என்றாலும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு, எம்.ஜி.ஆர். சிகிச்சை தொடர்பானவை குறித்த ஆவணங்களால் விசாரணைக்கு எந்த அளவுக்கு உதவும் என்பது போகப்போகத்தான் தெரியும்...!

click me!