’அர்ஜுன் சம்பத்தை ‘குண்டர்’ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ - விசிக வன்னி அரசு வலியுறுத்தல்

manimegalai a   | Asianet News
Published : Nov 18, 2021, 11:32 AM IST
’அர்ஜுன் சம்பத்தை ‘குண்டர்’ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ - விசிக வன்னி அரசு வலியுறுத்தல்

சுருக்கம்

  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விசிகவின் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார்.  

 

நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும், அதனால் நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ட்விட்டரில் அறிவித்து இருந்தார்.இந்த பதிவு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில்  பெங்களூரு விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்னர், அந்த நபர் விமானத்தில் மது அருந்திவிட்டு இருந்ததாகவும், அவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால், மது அருந்தி இருந்ததால் விஜய் சேதுபதியின் உதவியாளர் ஜான்சன் செல்ஃபி எடுக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விஜய் சேதுபதி உதவியாளருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, பிறகு அது கைகலப்பு ஆனது என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரித்து இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர், தனது பெயர் மகா காந்தி என்றும், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக நன்றி தெரிவிக்க சென்றதாகவும், ஆனால், அவர் இது தேசமாக என்று கேட்டதாகவும் விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டினார். மேலும், விஜய் சேதுபதியை குரு பூஜைக்கு வந்தீர்களா ?  என்று கேட்டதற்கு குரு என்றால் யார் என்று கிண்டலாக கேட்டார்.அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் உதவியாளர்கள் தன்னை அடிக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில்,  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதை செய்யும் விதமாக பேசிய விஜய் சேதுபதியை உதைத்தால் அவர்களுக்கு 1001 ரூபாய் பரிசு அளிப்பதாக ட்விட்டரில் கருத்தை பதிவிட்டார்.இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் சேதுபதியை அச்சுறுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா ? என்ற கேள்வி எழுந்தது. 

அர்ஜூன் சம்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அர்ஜுன் சம்பத் மீது  2 பிரிவுகளில் கோவை கடைவீதி காவல் நிலைய  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியை சேந்த வன்னி அரசு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்தது மட்டும் போதாது என்றும், இது போன்ற சமூகவிரோதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jantar Mantar Protest: 'ஹிட்' அடிச்சாலும் சாகாத கரப்பான் பூச்சிகள் நாங்கள்! - தலை நகரில் போராட்டம்
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!