அரியர் தேர்வு ரத்து வழக்கு, அடங்காத மாணவர்கள்... விசாரணைக்கு இடையூறு, எச்சரித்த நீதிபதிகள்.

By Ezhilarasan BabuFirst Published Nov 21, 2020, 10:43 AM IST
Highlights

வழக்குகள் விசாரணை தடைபட்டதால், தேவையில்லாமல் லாக் இன் செய்தவர்களை வெளியேறும்படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் எவரும் வெளியேறவில்லை.

அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் நுழைந்ததால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அப்போது அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு, நேற்று 26 வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

வழக்கை ஆர்வமுடன் எதிர் நோக்கி நூற்றுக்கணக்கான மாணவர்கள் காத்திருந்தனர், ஆன்லைனில் நடைபெற்ற இந்த விசாரணையில் மொத்தம் 350 பேர் வரை லாக் இன் செய்திருந்ததுடன், வீடுகளில் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன. இதனால் வழக்கு விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது எனவே வழக்கு விசாரணையை நீதிபதிகள் நிறுத்திவைத்தனர்.

வழக்குகள் விசாரணை தடைபட்டதால், தேவையில்லாமல் லாக் இன் செய்தவர்களை வெளியேறும்படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் எவரும் வெளியேறவில்லை. கடந்த விசாரணைகளின் போதும் ஏராளமான மாணவர்கள், விசாரணையில் பங்கேற்று, இடையூறு ஏற்படுத்தினர். அப்போது, மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

 

click me!