அமித் ஷா மகனின் சொத்துக்களை என் பெயரில் எழுதி வைக்கிறீங்களா... நான் என் சொத்தை தர்றேன்... உதயநிதி சவால்..!

Published : Apr 03, 2021, 10:52 AM IST
அமித் ஷா மகனின் சொத்துக்களை என் பெயரில் எழுதி வைக்கிறீங்களா... நான் என் சொத்தை தர்றேன்... உதயநிதி சவால்..!

சுருக்கம்

குஜராத்தில் அமைச்சராக இருந்தபோது போலி என்கவுண்டர் வழக்கில் கம்பி எண்ணியவர்தான் இந்த அமித்ஷா.

அமித் ஷா மகனின் சொத்துக்களை என் பெயரில் எழுதி வைக்கிறீங்களா... நான் என் சொத்தை தர்றேன் என சவால் விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ‘’இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெய்ஷா. அவர் நடத்தும் கம்பெனிகளுக்கு வரி கட்டவில்லை. குஜராத்தில் அமைச்சராக இருந்தபோது போலி என்கவுண்டர் வழக்கில் கம்பி எண்ணியவர்தான் இந்த அமித்ஷா. குஜராத் நீதிமன்றம் சொல்லி ஆறு மாதம் மாநிலத்துக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டு ஊரைவிட்டு ஓடியவர் தான் இந்த அமித்ஷா. தைரியம் இருந்தால் சவாலுக்கு வாருங்கள். நான் என் பெயரில் உள்ள அத்தனை சொத்துக்களையும் உங்கள் பையன் பேரில் எழுதி வைக்கிறேன். உங்கள் மகன் பெயரில் உள்ள சொத்துக்கள் முழுவதும் என் பேரில் எழுதி வைத்து வையுங்கள் பார்க்கலாம். 

மோடி அவர்களே அமித்ஷா அவர்களே நாங்கள் உங்களைப் பார்த்து பயப்படுவதற்கும், கோழைக்கும்பிடு போடுவதற்கும் நாங்கள் ஒண்ணும் எடப்பாடியோ, ஓபிஎஸோ கிடையாது. நான் யாரு? உதயநிதி ஸ்டாலின். கலைஞர் பேரன். உங்கள் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் தங்கை செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. நான் சவால் விடுகிறேன். நான் எனது வீட்டு முகவரி தருகிறேன். சித்தரஞ்சன் சாலை. தைரியமிருந்தால் என் வீட்டிற்கு வந்து பார்’’ என சவால் விட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!