
நீங்கள் வெர்ஜினா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கொஞ்சமும் தயங்காமல் இல்லை என செ*** குயின் ஷகிலா பதில் கூறியுள்ளார். யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் நேயர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
90களில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ஷகிலா.. மலையாள திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் முதன் முறையாக துணை நடிகராக அறிமுகமானார் ஆவார். விரசத்தை தூண்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி புகழின் உச்சத்தை அடைந்தவர் ஷகிலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிப் படங்களிலும் கொடிகட்டிப் பறந்தவர் அவர். பல முன்னணி நடிகர்களின் படங்களை விட அவரது படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கட்டி ஆண்டவர் அவர். ஒரு கட்டத்தில் மலையாள படம் என்றாலே அது சகிலா படம் தான் என்று பேசக்கூடிய அளவிற்கு 100 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
பாலுணர்வைத் தூண்டும் படங்கள் மட்டுமின்றி குணச்சித்திர வேடம், நகைச்சுவை கதாப்பாத்திரம் என அனைத்து வித கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் அவர். இந்நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் மின்னினார் ஷகிலா, அப்போதுதான் அவரது இளகிய குணம், அவரின் அன்பான நடவடிக்கைகள் பலரையும் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சியின் மூலமே அவர் மீதான கண்ணோட்டம் மாறியது, அவரின் உண்மை முகம் அறிந்த பலரும் நெகிழ்ந்து போயினர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அவரது ரசிகர்களாகவே மாறி விட்டனர் என்றே சொல்லலாம். இந்நிலையில்தான் தனியார் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதில் எழுப்பப் பட்டுள்ள பல்வேறு ஏடாகூட கேள்விகளுக்குகூன தயங்காமல் துணிச்சலாக பதிலளித்துள்ளார்.
நீங்க " வெர்ஜினா " என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தனக்கே உரிய வெட்கத்துடன் " நான் இல்லப்பா" என கூறியுள்ளார். இந்த நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவரிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கான அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:-
கேள்வி: உங்கள் முதல் ச***..?
ஷகிலா: ஆமாம் நான் செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன். எனது நண்பராக இருந்த ரிச்சர்டு என்பவருடன் செக்ஸில் ஈடுபட்டு இருக்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்..
ஷகிலா: கமல்ஹாசன் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கேள்வி: குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடிக்காதவர் யார்..?
ஷகிலா: அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு டயர்டாகி எப்போது வீட்டுக்கு போகலாம் என புறப்படும் நேரத்தில் மேடம் ஒரு பைட் கொடுங்க என பேட்டி கேட்பார்கள் அது சுத்தமாக பிடிக்காது.
கேள்வி: தற்கொலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?
ஷகிலா: தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள், தற்கொலை செய்து கொள்வதற்கு அதிக தைரியம் வேண்டும். ஒரு விஷயத்தை முயற்சித்து முயற்சித்து தோல்வி அடையும்போது, இனி நம்மால் வளரமுடியாது என தவறான முடிவுக்கு வரும்போது தற்கொலை செய்துகொள்கிறார்கள். எவர் ஒருவரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. எவறும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள், உங்களைப்போன்ற தைரியசாலிகள் எங்களுக்கு வேண்டும். கடவுள் கொடுத்த வாழ்க்கையை அவர் மட்டும் தான் எடுக்க வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ள எவருக்கும் உரிமை இல்லை.
கேள்வி: அழுகையை பற்றி...?
ஷகிலா: நான் பயங்கர அழுமூஞ்சி.. என் பாய்பிரெண்ட் என்னை திட்டக்கூடாது.. நான் நேர்மையாக இருக்கிறேன், அப்போது என்னுடைய பாய் பிரண்ட் என்னை திட்டும் போது நான் நிச்சயம் அழுவேன். அப்படி நிறைய அழுதிருக்கிறேன். இவர் அவர் கூறியுள்ளார்.