அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா..!

Published : Apr 11, 2021, 02:20 PM IST
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா..!

சுருக்கம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாதவராவ் என்ற வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நுரையீரல் தொற்றும் அவருக்கு இருந்ததையடுத்து, அதற்காக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணமலைக்கும் கொரோனா தொற்றும் உறுதியாகியுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அண்ணாமலை, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!