காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

Published : Nov 29, 2020, 09:59 AM IST
காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி அதிமுகவில் முக்கிய பதவி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

சுருக்கம்

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி செய்தி தொடர்பாளாராக நியமிக்கப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்ரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;- தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் அப்சரா ரெட்டி இன்று முதல் இணைக்கப்கொள்ளப்படுகிறார்.

தொலைக்காட்சிகள் மற்றும் சமூக தொடர்பு ஊடகங்களில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து பேசுவதற்காக அப்சரா ரெட்டி அவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மண்டல தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!