வானத்தில் ஜிவ்வுன்னு பறக்கிற சந்தோஷத்தில் இருக்கிறேன் ! அப்பாவு அதிரடி பேட்டி !!

By Selvanayagam PFirst Published Oct 4, 2019, 10:27 PM IST
Highlights

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள்  இன்று மறு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தான் மிகுந்த மகிழ்ச்சியில் திளைப்பதாக தெரிவித்தார்.

கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
 
இந்தநிலையில் இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும் கடைசி மூன்று சுற்றுக்களான 19, 20 மற்றும் 21- வது சுற்றுக்களில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது.


 
அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து மீண்டும் தவறாக எண்ணப்பட்டதாக்கூறி தபால் வாக்கு இருமுறை எண்ணப்பட்டது. அதன் பின்னர் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு  இறுதியாக 07. 49 முடிவுக்கு வந்தது. 

இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு,  வாக்கு எண்ணப்பட்டு முடிவடைந்து உள்ளது. மிகுந்த சந்தோசத்தில் இருப்பதாகவும். வாக்கு எண்ணிக்கை வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பேச முடியாத நிலையில் உள்ளேன் என தெரிவித்தார். பின்னர் பேசிய அப்பாவு அதிமுக வேட்பாளர் இன்பதுரை தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் பேச முடியாது என்றும் கூறினார். 
 

click me!