ஜெ மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும்...! விசாரணைக்கு ஒத்துழைக்க அப்பல்லோ தலைவர் திடீர் முடிவு...!

By Asianet TamilFirst Published Aug 19, 2019, 5:31 PM IST
Highlights

அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதையோ மறைக்க முயற்ச்சி செய்வதாக விசாரணை ஆணையத்தின் அதிகாரி ஆறுமுகசாமி தெரிவித்திருந்த நிலையில் ,தற்போது மீண்டும் விசாரணை தொடங்கினால் ஒத்துழைக்கிறேன் என்று அப்பல்லோ தலைவர் கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன் என அப்பல்லோ மருத்துவமனைத்தலைவர்  பிரதாப் ரெட்டி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவ மணாவர்களுக்கான தயாரிக்கப்பட்ட சிறப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் கலந்து அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, நூலை வெளியிட்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டதோ ,அதே போன்றுதான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டது என்றார். உலக புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களைக்கொண்டு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை நானே நேரடியாக கண்காணித்து வந்தேன் என்றார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நாங்கள் தெரிவித்த மருத்துவ ரீதியான கருத்துக்கள் முறையாக மொழியாக்கம் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.  மருத்துவ கலைச்சொற்களை நன்கு அறிந்தவர்களைக்கொண்டு ஒரு புதிதாக குழு அமைத்து மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு வேலை ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால் அதற்கு  முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.  ஏற்கனவே, அப்பல்லோ நிர்வாகம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதையோ மறைக்க முயற்ச்சி செய்வதாக விசாரணை ஆணையத்தின் அதிகாரி ஆறுமுகசாமி குற்றஞ்சாட்டியிருந்தார், இந் நிலையில் ,தற்போது மீண்டும் விசாரணை தொடங்கினால் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என அப்பல்லோ தலைவர் கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளது.

click me!