ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அவகாசம் கேட்கிறார் அப்பலோ பிரதாப் ரெட்டி

 
Published : Dec 30, 2017, 10:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அவகாசம் கேட்கிறார் அப்பலோ பிரதாப் ரெட்டி

சுருக்கம்

apollo chairman pratab reddy seeking more days in person before enquiry commission

ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம். இந்த ஆணையத்தில் இருந்து ஜெயலலிதா மரண விவகாரத்தில் தொடர்புடையவர்கள், தகவல் அறிந்தவர்கள் என பலருக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. 

அவ்வாறு, ஜெயலலிதா கடைசிக் காலத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்ட அப்பலோ மருத்துவமனை குறித்தும் விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அப்பலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. அப்பல்லோ குழும துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக  பிரதாப் ரெட்டி மேலும் அவகாசம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனவரி 2 ஆம் தேதி பிரதாப் ரெட்டி ஆணையத்தின் முன் ஆஜராகி, மேலும் 2 வார காலத்துக்கு அவர் அவகாசம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!