
கர்நாடக மாநிலத்தின் பாடல் ஒலிக்கப்பட்டபோது, அதற்கு அவமரியாதை செய்யும்வகையில், வாயில் ‘சூயிங் கம்’ மென்ற பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தும்கூரு மாவட்டத்தில் இருக்கும் சிரா நகரில் கடந்த வியாழக்கிழமை ‘சதானா சமவேஷா நிகழ்ச்சி’ நடந்தது. அதில் முதல்வர் சித்தராமையா, அமைசச்சர்கள், அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அப்போது, அந்த விழாவில் பயிற்ச்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரீத்தி கெலாட்டும் பங்கேற்றார்.
அப்போது கர்நாடக மாநிலத்தின் பாடல் ஒலிப்பரப்பானபோது, பிரீத்தி கெலாட் வாயில் ‘சூயிங் கம்’ மென்று கொண்டு இருந்தார். இது அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகி பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தும்கூரு மாவட்ட கலெக்டர் கே.பி. மோகன் ராஜ் நோட்டீஸ் அனுப்பி பிரீத்தி கெலாட்டிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
இது குறித்து கலெக்டர் மோகன் ராஜ் கூறுகையில், “ கர்நாடக பாடல் ஒலிபரப்பானபோது, பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரீத்தி கெலாட் வாயில் மென்று கொண்டு இருந்தது குறித்து விசாரணை நடத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி 7 நாட்களில் விளக்கம் அளிக்க கேட்டு இருக்கிறேன்’’ என்றார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாநிலத்தின் பாடல் ஒலிபரப்பானபோது, அதற்கு மரியாதை அளிக்காமல், அவமரியாதைக் குறைவுடன் நடந்து கொண்டது பல்வேறு தரப்பினும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களைக் காட்டிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மிகுந்த ஒழுக்கத்துடன், கவனத்துடன் செயல்பட்டு இருக்க ேவண்டும் என்றும் மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.