
டி.டி.வி.தினகரனை மரியாதை நிமித்தமாகவும், கட்சிக்காகவும் சந்தித்தாக அனவர் ராஜா எம்பி விளக்கமளித்துள்ளார்.
.டிடிவி.தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக அறிவித்ததையடுத்து, தினகரனுக்கென எம்எல்ஏக்கள் மத்தியில் தனி அணி ஒன்று உருவாகியுள்ளது. 32 எம்எல்ஏக்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதே போன்று விருதுநர் எம்.பி.கோபாலகிருஷ்ணன் எம்பியும் தினகரனை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இன்று சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக கூறினார். மேலும் அவரை கட்சிக்காத் தான் சந்தித்தாக கூறினார்.
தமிழகத்தில் கட்சி வேறு, ஆட்சி வேறு இல்லை என தெரிவித்த அன்வர் ராஜா, குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தெரிவித்தார்.
இன்று நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு, இதை முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.
அதிமுக சிறுபான்மைப் பிரிவுக்கு செயலாளராக நான் இருந்தாலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு மட்டும் தான் செய்வதாகவும் அதில் யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது எனவும் அன்வர் ராஜா தெரிவித்தார்.