தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு..!கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்..!

By T BalamurukanFirst Published Oct 29, 2020, 9:55 AM IST
Highlights

மதுரை பழங்காநத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு பணிகளை முடித்து தருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அதன்படி பதிவாளர் பாலமுருகன் அறையில் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 19 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வட்டாரபோக்குவரத்து பத்திரபதிவு துறைகளில் தினந்தோறும் தீபாவளி தான் இங்குதான் பணம் பாதாளம் வரைக்கு பாயுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடிக்க நினைத்தால் இந்த துறைகளில் தினந்தோறும் ரெய்டு நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பிடிக்கலாம். அதைவிடுத்து தீபாவளி நேரத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ஊழியர்களை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மதுரை பழங்காநத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு பணிகளை முடித்து தருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அதன்படி பதிவாளர் பாலமுருகன் அறையில் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 19 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 46 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அத்துடன் விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும், மின் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன் சேலம் கந்தம்பட்டி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக சோதனையில் ரூ. 1.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. நாமக்கல் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 55 ஆயிரத்து 470 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி சுமார் 7லட்சம் ரூபாய்க்கும் மேல் அரசு அலுவலகங்களில் பணம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!