முதல்வர் ஸ்டாலினுக்கு தேங்க்ஸ் சொன்ன அண்ணாமலை…! என்ன விஷயம் தெரியுமா…?

Published : Oct 14, 2021, 06:58 PM IST
முதல்வர் ஸ்டாலினுக்கு தேங்க்ஸ் சொன்ன அண்ணாமலை…! என்ன விஷயம் தெரியுமா…?

சுருக்கம்

முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் சேகர்பாபுக்கும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார்.

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் சேகர்பாபுக்கும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக மதபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்தது.

தமிழக அரசின் இந்த தடையை எதிர்த்தும், அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தியும் தமிழக பாஜக தரப்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தீச்சட்டி ஏந்தி, குலவையிட்டும் தமிழக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: மக்களுக்காக நடத்தப்பட்ட எங்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து முடிவு எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

நவராத்திரி தினத்தில் தமிழக பாஜக  வேண்டுகோளை ஏற்று அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!