மின் வெட்டு குறித்து அண்ணாமலை அவதூறு..?? கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. செந்தில் பாலாஜி எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2022, 11:45 AM IST
Highlights

மின்வெட்டு குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு என்ற மாய பிம்பத்தை உருவாக்க எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

மின்வெட்டு குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு என்ற மாய பிம்பத்தை உருவாக்க எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தமிழக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும் கூறிவருகின்றன. அதேநேரத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் மின்வெட்டு தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. இதேபோல் கடந்த வாரம் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என எச்சரித்த தமிழக அரசு, உடனே மத்திய அரசு தேவையான நிலக்கரி விநியோகம் செய்ய வேண்டும் என கோரியது.

அதே போல ஒரு சில இடங்களில் மின்வெட்டும் ஏற்பட்டது, போதிய நிர்வாகத் திறமையின்மை காரணமாகவே இந்த மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இது குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வெட்டு ஒரு நாளில் சரி செய்யப்பட்ட்டு விட்டது, மத்திய அரசு தர வேண்டிய மின்சாரம் கிடைக்காத தே மின் வெட்டுக்கு காரணம், இனி திமுக ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என உறுதியளித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக சமீபத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் பதில் அளித்தும் பேசினார், அப்போது முன்பு இருந்ததைக் காட்டிலும் தமிழ்நாட்டின் மின் நுகர்வு என்பது அதிகரித்துள்ளது. 

மத்திய தொகுப்பில் இருந்து உரிய மின்சாரம் கிடைக்காததால் மின்வெட்டுக்கு காரணம் அவசர தேவை கருதி குறைந்த அளவில் அதாவது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கோடை காலத்தில் அதிக மின் தேவை ஏற்படும் என்பதை கணக்கிட்டு 48 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர்  கோரப்பட்டுள்ளது. குஜராத் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது அதுவும் சரி செய்யப்பட்டு விட்டது எனக் கூறி இருந்தார். அதேபோல் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் இன்றும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மின்வெட்டு எவ்வாறு நிகழ்கிறது என கேள்வி எழுப்பிய அவர்,  தமிழகத்தில் மட்டும் மின்வெட்டு இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த பாஜக மாநில திருஅண்ணாமலை முயற்சிக்கிறார் என்றார். பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தில் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காகத்தான் சொந்த மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு  வருகிறதா? என்றும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். எனவே மின்வெட்டு குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
 

click me!