செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின் சொன்ன விஷயம்.. ‘பரபரப்பு’ வீடியோ வெளியிட்ட அண்ணாமலை..

By manimegalai aFirst Published Oct 21, 2021, 6:57 AM IST
Highlights

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் முறைகேடுகள் நடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மின் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகையை அனுப்ப 4 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளனர் என்ற அதிரடி குற்றச்சாட்டை டுவிட்டர் பதிவு மூலமாக அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவுக்கு மின்துறை அமைச்சர் சுடச்சுட பதிலும் அளித்து பரபரக்க வைத்திருக்கிறார்.  அதில் அவர் கூறி இருப்பதாகவது:

 

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், (1/4) pic.twitter.com/sQu1KHbjAL

— V.Senthilbalaji (@V_Senthilbalaji)

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல்,

All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.

2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில்

நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை என்று பதில் அளித்துள்ளார்.

இந்த பதிவுகளுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதில் கொடுத்துள்ளார். அதில் அதிமுக ஆட்சியின் போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து பேசிய வீடியோ பதிவு ஒன்றையும் தமது டுவிட்டர் பதிவில் இணைத்து வெளியிட்டு உள்ளார்.

Anna.

More proof from your own party!

🙏. https://t.co/vSlF2Az6OY pic.twitter.com/sldDM5nByd

— K.Annamalai (@annamalai_k)
click me!