”அண்ணாமலை ஒரு அரைவேக்காடுங்க”.. விசிக கம்யூனிஸ்ட் போராட்டத்தில் கடுமையாக விமர்சித்த கே.பாலகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2022, 2:13 PM IST
Highlights

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரைவேக்காடு என்றும் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி வருகிறார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரைவேக்காடு என்றும் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி வருகிறார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 18 முறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி விட்டு இரண்டு முறை குறைத்ததை பெரிய சாதனையாக பாஜகவினர் பேசி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசு பெட்ரோல் டீசல் பொருட்கள் மீதான வரிகளைக் கைவிட வேண்டும், பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அடிப்படை உணவு பொருட்கள், ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்றும், வருமான உச்சவரம்பை எட்டாத குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்: தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்த மோடியால் தற்போது வேலை வாய்ப்பின்மையே உருவாகியுள்ளது,  நாங்கள் நடத்தும் இந்த போராட்டம் ஜனநாயக சக்திகளின் கவனத்தை ஈர்க்கும் போராட்டமாக இருக்கும் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், 18 முறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி விட்டு இரண்டு முறை அதன் விலை குறைத்ததை பெரிய சாதனையாக பாஜகவினர் பேசி வருகின்றனர் என்றார். நேற்று பிரதமர் எதிரில் மாநில உரிமைகளை முன்வைத்து முதல்வர் பேசியதை அண்ணாமலை கண்டித்துள்ளாரே என செய்தியாளர்களை எழிப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அண்ணாமலை ஒரு அரைவேக்காடு என்றும், எந்த நேரத்தில் எதைப் பேசுவது என்று தெரியாமல் பேசி வருகிறார் என்றும் விமர்சித்தார். 

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டு மக்களின் நியாமான கோரிக்கைகளை பிரதமரிடம்  முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல. தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றியும் கூட எதுவும் பேசவில்லை. அண்ணாமலைக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை உண்டா?

முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிரைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.ஆனால், அதை மறைத்து - தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.

தமிழகத்தில் இரண்டு நாட்களாக நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அண்ணாமலை தலைமைச் செயலகத்தைமுற்றுகையிடுவதைவிட டெல்லியில் உள்ள செங்கோட்டையை  முற்றுகையிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்றார். 
 

click me!