அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர்.. அவரோடு விவாதிக்க ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறேன்.. திருமா கிண்டல்.!

Published : Apr 21, 2022, 09:58 AM IST
அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர்.. அவரோடு விவாதிக்க ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறேன்.. திருமா கிண்டல்.!

சுருக்கம்

மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டதாகவும், ஆளுநரைத் தாக்க முயற்சித்ததாகவும் பாஜகவினர் மீண்டும் மீண்டும் வதந்தியை பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்தி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதனை அவர்கள் கைவிட வேண்டும். இத்தகைய போக்கு ஆபத்தானது.

அரசியலில் அண்ணாமலை ஒரு  சப் ஜூனியர். அவரோடு விவாதிக்க அவரைப்போல ஒரு  சப் ஜூனியரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இருந்து அனுப்பி வைக்கிறேன் என திருமாவளவன் கூறியுள்ளார்.

வதந்தியை பரப்பும் பாஜக

காரைக்காலில் செய்தியாளர்ககளுக்கு பேட்டியளித்த  திருமாவளவன்: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டதாகவும், ஆளுநரைத் தாக்க முயற்சித்ததாகவும் பாஜகவினர் மீண்டும் மீண்டும் வதந்தியை பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்தி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதனை அவர்கள் கைவிட வேண்டும். இத்தகைய போக்கு ஆபத்தானது.

இது ஆரோக்கியமானது அல்ல

அம்பேத்கரும், பெரியாரும் கூட விமர்சனத்துக்குரியவர்கள் என்கிறபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. தேர்தல் நேரங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் இதுவரை நிறைவேற்றியதில்லை. இந்த நிலையில் அவரை அரசியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகையில் குற்றம் என்பது விளங்கவில்லை. தமிழகத்தை குறிவைத்து இதை தொடர் உரையாடலாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது ஆரோக்கியமானது அல்ல.

அண்ணாமலை ஒரு சப் ஜூனியர்

விளையாட்டுப் போட்டியில் கூட சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என்று பிரிவுகள் உண்டு. அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவரோடு விவாதிக்க அவரைப் போலவே ஒரு சப் ஜூனியரை வேண்டுமானால் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!