நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்.! பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்யை ஒதுக்கி வைக்கிறோமா.? - அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Aug 2, 2023, 2:59 PM IST

அதிமுகவில் உள்ள யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை,  ஆனால் அதிமுகவை பொறுத்தவரை யாரை அங்கீகரிக்க வேண்டும்,  யாரை கூப்பிட வேண்டும். என்று கட்சி முடிவு செய்து கூட்டணி கட்சி கூட்டத்திற்கு அழைக்கின்றனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அண்ணாமலை நடை பயணம்

தமிழகம் முழுவதும் நடை பயணத்தை தொடங்கியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, புதுக்கோட்டை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை பொறுத்தவரை இந்த யாத்திரை மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு.   9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி மாற்றத்தை தந்துள்ளார்.  இந்த யாத்திரை மூலம் நல்லதொரு மாற்றம் வரும் என்பது எங்களது நோக்கம். எதிர்கட்சிகள் விமர்சனங்கள் வைக்க, வைக்க நாம் செய்யக்கூடிய வேலை சரி என்று நமக்கு தோன்றும். மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை நடை பயணத்தில் பார்க்க முடிகிறது.

Latest Videos

undefined

அதேபோல் திமுக ஆட்சியில் அவர்கள் செய்யும் குற்றங்களை ஆதாரத்துடன் கொடுத்து வருகின்றோம். எதையும் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல் பாஜகவின் ஆட்சியில் செய்த வேலையை மக்களிடம் சொல்லி மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பிரதமராக்க ஆதரவு கரம் நீட்ட கேட்டுக் கொண்டு வருகின்றோம்.

ஓபிஎஸ்யை விலக்கி வைக்கவில்லை

யாத்திரையை பொறுத்தவரை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு. இன்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை வைக்கலாம். ஆனால் இந்த யாத்திரை முடியும்போது அவர்களுக்கு தெரியும்.  அதிமுகவில் உள்ள யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை,  ஆனால் அதிமுகவை பொறுத்தவரை யாரை அங்கீகரிக்க வேண்டும்,  யாரை கூப்பிட வேண்டும். என்று கட்சி முடிவு செய்து கூட்டணி கட்சி கூட்டத்திற்கு அழைக்கின்றனர். நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை. ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் விரக்தி ஆக இல்லை. ஓபிஎஸ் போன்றவர்கள் மிகப் பெரிய தலைவர்கள். தமிழ்நாட்டில் மக்களுக்காக அரும்பாடும் பட்டவர்கள், முதலமைச்சராக இருந்தவர், வேறு வேறு பொறுப்புகளில் மக்கள் பணி செய்தவர். தமிழ்நாட்டு மக்களுக்கு பணி செய்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை.  

திமுகவின் 2வது ஊழல் பட்டியல்

இவர்கள் தவறானவர்கள் என்று நாங்கள் யாரையும் சொல்லவில்லை. பாஜக தனது வேலையை செய்கிறது.  அதிமுகவோடு அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் உள்ளது.  கூட்டணி கட்சி கூட்டத்திற்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டு உள்ளது. அதனால் இதில் யாருக்கும் வருத்தம் கிடையாது. திமுகவின் ஊழல் பட்டியலில் முதல் பட்டியல் திமுகவினர் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வெளியிடப்பட்டது. இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியல் நடவடிக்கைக்காக வெளியிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்காததால் தற்பொழுது இந்த பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பார். அமித்ஷா சொன்னதை போல இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஊழல் செய்யக்கூடிய அரசாங்கமாக இருப்பது திமுக தான், அதைத்தான் மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம். 

அமலாக்கத்துறை நடவடிக்கை

அரசுக்கு சாராத அமலாக்கத்துறையும், சிபிஐயும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதை யாரும் தமிழ்நாட்டில் பேச மறுக்கிறார்கள். அதை விடுத்து அண்ணாமலை வெளியிட்ட குற்றசாட்டில் கமா உள்ளதா.? ஃபுல் ஸ்டாப் உள்ளதா ? என்று விவாதம் செய்வதை தவிர்த்து குற்றச்சாட்டுகளை பார்க்க வேண்டும்.  அமலாக்கத்துறையை பொறுத்தவரை எடுக்கக்கூடிய நடவடிக்கை எல்லாமே நடுநிலையாக உள்ளது. ஆனால் இதில் போலியானவர்கள் ஊழல் அடிப்படையில் வைத்து அரசியல் நடத்துபவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவுடன் அமலாக்கத்துறை மீது குறை சொல்கிறார்கள்.  இதுதான் நடக்கக்கூடிய தவறான விஷயம். எம்பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளதால் இடி தேவை இல்லை என்று தான் கூறுவார். ஏனென்றால் மூன்றாவது சோதனை வந்துவிடும் என்ற அச்சத்தால், கார்த்தி சிதம்பரத்தின் குடும்பமே ஊழல் செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை

கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். கூட்டணியில் வருபவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு ஒற்றுமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யார் வருகின்றார்களோ வரட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை கதவுகள் திறந்து தான் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் நான் எந்த இடத்திலும் போட்டியிடவில்லை.  பாதயாத்திரை முடித்துவிட்டு கட்சிப் பணியை செய்யத்தான் நேரம் இருக்கிறது.  என் வேலை கட்சியை வளர்ப்பது,  கட்சி வேலை செய்வது என அண்ணாமலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

2024 தேர்தல்: தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு என்ன?

click me!