பீஸ்டில் இந்தி எதிர்ப்பு வசனம்... பாஜகவின் நிலைப்பாடு என்ன? விளக்கமளித்த அண்ணாமலை!!

Published : Apr 14, 2022, 03:06 PM IST
பீஸ்டில் இந்தி எதிர்ப்பு வசனம்... பாஜகவின் நிலைப்பாடு என்ன? விளக்கமளித்த அண்ணாமலை!!

சுருக்கம்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி வசனம் பற்றிய கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி வசனம் பற்றிய கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்து மூலம் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி வசனத்திற்கு எதிராக பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு  ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படம் நாடு முழுவதும் திரையரங்கில் நேற்று வெளியானது. இந்த படம் வெளியானது முதல் பல்வேறி விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகள் பற்றியும் கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. அந்த வகையில், பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து இடம்பெற்றுள்ள வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி, காவிக் கொடியை கிழித்துக் கொண்டு என்ட்ரி கொடுப்பது போன்ற காட்சியும் இடம்பெற்று, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுக்குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், படங்கள் என்றால் ஆயிரத்து எட்டு கருத்துக்கள் வரும். படத்தை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதேபோல, இந்தப் படத்தில் பலர் பல கருத்துக்களை சொல்வார்கள். அதனை விடுங்க.  தமிழக பாஜகவுக்கும், திரையுலக நட்சத்திரங்களுக்கும் அற்புதமான பந்தம் உள்ளது. படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருந்தால் அதனை படமாகத்தான் பார்க்க வேண்டும்.

அதேபோல, இந்தியை பொறுத்த வரையில், இந்தி திணிப்பு இல்லை என்று பிரதமர் மோடியே சொல்லிவிட்ட நிலையில், அதனை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதனைத் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்து மூலம் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி வசனத்திற்கு எதிராக பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. முன்னதாக 132வது அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அணிவித்து மரியாதை செலுத்தினர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!