திமுக, அதிமுகவிற்கு ஆதரவாக ஒரே நாளில் களத்தில் குதிக்கும் கமல்ஹாசன், அண்ணாமலை..! திக்குமுக்காடும் ஈரோடு தொகுதி

By Ajmal Khan  |  First Published Feb 19, 2023, 3:12 PM IST

ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு  ஆதரவாக கமல்ஹாசனும், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அண்ணாமலையும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
 


சூடு பிடிக்கும் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக தென்னரசு போட்டியிடுகிறார். இவர்கள் மட்டுமில்லாமல் நாம் தமிழர், தேமுதிக கட்சியும் போட்டி களத்தில் உள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் திமுக இரண்டு பேரும் இந்த தொகுதியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்து 22 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரம் என்ற ரீதியில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

Latest Videos

கமல்-அண்ணாமலை பிரச்சாரம்

அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தை தங்களது கோட்டை என கூறிவரும் அதிமுகவும் இந்த தேர்தலை தீவிரமாக எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக 100க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இந்தநிலையில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெறவுள்ள பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அவர்களுக்காக வாக்குகள் சேகரிக்க இன்று மாலை ஈரோடு வருகிறேன். மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்.

— Kamal Haasan (@ikamalhaasan)

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க இன்று மாலை ஈரோடு வருகிறேன். மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என பதிவிட்டுள்ளார்.

திக்குமுக்காடும் ஈரோடு

அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். ஒரே நாளில் இரு தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது  ஈரோடு கிழக்கு தொகுதியை திக்குமுக்காடவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

பெண்களுக்கான உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என தெரியுமா.?முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்

click me!