அடக்கி வைக்கிறீங்களா? இல்ல பெரியார்- கருணாநிதி உண்மைகளை அவிழ்த்து விடவா..? ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா எச்சரிகை..!

Published : May 14, 2020, 11:59 AM IST
அடக்கி வைக்கிறீங்களா? இல்ல பெரியார்- கருணாநிதி உண்மைகளை அவிழ்த்து விடவா..? ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா எச்சரிகை..!

சுருக்கம்

ஈ.வெ.ரா, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் பற்றிய உண்மைகள் பாஜகவினர் பேச வேண்டி வரும் என பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, முக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 


ஈ.வெ.ரா, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் பற்றிய உண்மைகள் பாஜகவினர் பேச வேண்டி வரும் என பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, முக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

திமுக ஊடகப்பேச்சாளர் தமிழன் பிரசன்னா தொடர்ந்து பாஜகவை பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் கீழ்த்தரமாக பேசி வருகிறார்.  பிரதமர் மோடி கயிற்றில் தொங்குவதை பார்க்க மக்கள் தயாராக இருப்பதாக கூறினார். அடுத்து கவர்ச்சி நடிகை ஷகீலா படத்தை போட்டு ஒப்பிட்டு மோடியை இழிவுபடுத்தி தனது சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இது பாஜகவினரை கோபப்படுத்தி வருகிறது. அவர்கள், தமிழன் பிர்சன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் திமுக தலைமை இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

 இந்நிலையில், இதுகுறித்து கொதித்தெழுந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ’’தமிழன் பிரசன்னா, மனோ தங்கராஜ் போன்றவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களை இழிவாக பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். இல்லையேல் ஈ.வெ.ரா, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் பற்றிய உண்மைகள் பாஜகவினர் பேச வேண்டி வரும்’’என எச்சரித்துள்ளார்.  
 

 

PREV
click me!

Recommended Stories

வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!
விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!