நான் நிரந்தர தளபதி... வைகோ போர்வாள்... மதிமுக மேடையில் தரமான சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்..!

Published : Sep 15, 2019, 12:06 PM IST
நான் நிரந்தர தளபதி... வைகோ போர்வாள்... மதிமுக மேடையில் தரமான சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோதான். நீர் அடித்து நீர் விலகாது என்பதுபோல் நாம் ஒன்றாகி உள்ளோம். வைகோ தனது உடல்நலத்தை கொஞ்சம் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த மேடையில் வைகோவுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் ம.தி.மு.க மாநாட்டில் நான் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம். சர்வாதிகாரம் தலை தூக்கி வரும் நிலையில் ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது, தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை நிலவு வருகிறது.

 

திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோதான். நீர் அடித்து நீர் விலகாது என்பதுபோல் நாம் ஒன்றாகி உள்ளோம். வைகோ தனது உடல்நலத்தை கொஞ்சம் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும், மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!