சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாவின் கொள்ளுப்பேத்தி... குவியும் பாராட்டுகள்..!

By vinoth kumarFirst Published Aug 9, 2020, 11:02 AM IST
Highlights

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி பிரித்திகா ராணி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி பிரித்திகா ராணி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

2019ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை நேற்று யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இத்தேர்வில் எளிய பொருளாதாரம் கொண்ட வீடுகளைச் சேர்ந்த பலரும் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்நிலையில், அண்ணாவின் கொள்ளுப் பேத்தி பிரித்திகா ராணி சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து தேர்வு எழுதிய அவர், அகில இந்திய அளவில் 171வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.     அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

click me!