நூல் விட்டுப்பார்க்கும் அஞ்சாநெஞ்சன்... பாஜகவா..? அழகிரி திமுகவா..? அல்லாடும் உடன்பிறப்புகள்..!

Published : Sep 07, 2020, 04:44 PM IST
நூல் விட்டுப்பார்க்கும் அஞ்சாநெஞ்சன்... பாஜகவா..? அழகிரி திமுகவா..? அல்லாடும் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

அதற்கான முன்னோட்டமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, நுால் விட்டு பார்க்கிறார் அழகிரி எனக் கூறுகிறார்கள்.   

சமீபத்தில் திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் 'அழகிரி மீண்டும் தி.மு.க.,வுக்கு வரணும்... கட்சியை காப்பாத்தணும்' என அவரது ஆதரவாளர்கள், 'போஸ்டர்' ஒட்டி பரபரப்பை கிளப்பினார்கள். 'தி.மு.க.,வில் அழகிரிக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. ஆனாலும், தேர்தல் நேரத்தில் தீவிர அரசியலில் இறங்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான முன்னோட்டமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, நுால் விட்டு பார்க்கிறார் அழகிரி எனக் கூறுகிறார்கள். 

ஈரோடு மாவட்ட, தி.மு.க.,வில் மாநில துணை பொதுச் செயலர், சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட செயலாளர், முத்துசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி.ராஜா என ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுகிற தி.மு.க.,வினருக்கு வலை வீசி பா.ஜ.கவில் சேர்த்து கொண்டு இருக்கிறார்கள். இது இன்னும் அதிகரிக்கும் என பேசிக் கொள்கிறார்கள். இந்த கோஷ்டிப் பிரச்னையால் தான் கலைஞரின் தொண்டர்களை காப்பாற்று  என அழகிரிக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி