கிருஷ்ணசாமியை பழிவாங்கிய ‘அனிதாவின் ஆவி’! புலம்பிக் கொட்டும் புதிய தமிழகம்.

By Selvanayagam PFirst Published May 24, 2019, 8:09 PM IST
Highlights

டாக்டர். கிருஷ்ணசாமி ஒரு வித்தியாசமான அரசியல்வாதிதான். சமுதாயத்தின் மிக உயர்ந்த சாதியாக சொல்லப்படும் மனிதர்கள் கூட ‘இட ஒதுக்கீடு வசதி’க்காக தங்கள் குழந்தைகளுக்கு ‘பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட’ எனும் பெயரில் சாதிச் சான்றிதழ் வாங்க முயல்கின்றனர். ஆனால் இவரோ ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் தங்களின் சாதியை அதிலிருந்து நீக்கி, உயர்ந்த குல பட்டியலில் வைக்க போராடுகிறார். 

இப்பேர்ப்பட்ட கிருஷ்ணசாமி, ஒவ்வொரு தேர்தலுக்கும் கம்யூனிஸ்டுகள் மற்றும் பா.ம.க.வுக்கே சவால் விடும் வகையில் கூட்டணி மாறுவதில் வல்லவர். அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நின்றார். பி.ஜே.பி.யிடம் காட்டிய நெருக்கத்தின் வழியே சீட் வாங்கியவர், அ.தி.மு.க.வை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தார். 

தான் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் வெற்றி நிச்சயம்! என்று ஏகபோக நம்பிக்கையில் இருந்தார் டாக்டர். ஆனால் அவரை ஐந்தாவது முறையாக எம்.பி. தேர்தலில் தோற்கடித்துள்ளனர் தென்காசி நாடாளுமன்ற தொகுதி மக்கள். இந்த முறை பெரிதாய் எதிர்பார்த்து தோற்றிருக்கும் டாக்டரால் தன் மன உணர்வுகளை வெளிப்படையாய் பேசமுடியவில்லை பாவம். 

இந்நிலையில், ‘நீட் தேர்வுக்கு பலியான அனிதாவின் ஆவிதான் டாக்டரை பழிவாங்கிவிட்டது.’ என்கிறார்கள் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியினர். அதாவது, கெடுபிடியான நீட் தேர்வினால் அனிதா தற்கொலை செய்து கொண்ட போது ‘அந்த பெண்மணி அனிதா’என்று இளம் அனிதாவை, மிகவும் தள்ளி வைத்தும், சம்பிரதாயத்துக்கு சப்போர்ட் பண்ணியும் பேசினார் டாக்டர். இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. டாக்டருக்கு எதிரான விமர்சனங்களில் இதுவும் முக்கியமாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கிருஷ்ணசாமியின் இப்போதைய தோல்வியை ‘அனிதாவின் பழிவாங்கல்’ என்று அவரது கட்சியினரே சொல்வதை டாக்டரால் ஜீரணிக்க முடியவில்லை.

click me!