பாடகர் எஸ்பிபி உடலுக்கு ஆந்திரஅரசு மரியாதை..!

By T BalamurukanFirst Published Sep 26, 2020, 8:59 AM IST
Highlights

மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் பூர்வீகம் ஆந்திரமாநிலம் நெல்லூர் என்பதால் உலகப்புகழ் பெற்ற இன்னிசைக்குயில் நாயகன் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
 


மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் பூர்வீகம் ஆந்திரமாநிலம் நெல்லூர் என்பதால் உலகப்புகழ் பெற்ற இன்னிசைக்குயில் நாயகன் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்பிபி. 51 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கண்ணீர் மல்க இரங்கல் கூறி வருகின்றனர். எஸ்பிபி உடல் காலை 11 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.மாவட்ட ஆட்சியர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் நேரில் அஞ்சலி செலுத்தினார். எஸ்பிபியின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் நெல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது

click me!