Goutham Reddy: திடீர் மாரடைப்பு.. அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அமைச்சர்.. அதிர்ச்சியில் முதல்வர்

Published : Feb 21, 2022, 11:41 AM ISTUpdated : Feb 21, 2022, 11:50 AM IST
Goutham Reddy: திடீர் மாரடைப்பு.. அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அமைச்சர்.. அதிர்ச்சியில் முதல்வர்

சுருக்கம்

கடந்த ஒருவாரமாக துபாயில் முகாமிட்டு தொழில் முதலீடு தொடர்பாக கூட்டத்தில் ஐடி மற்றும் தொழிற்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி பங்கேற்றார். இதனையடுத்து, நேற்று ஐதராபாத் திரும்பிய நிலையில் வீட்டில் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் ஐடி மற்றும் தொழிற்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி(50) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சியினர் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஒருவாரமாக துபாயில் முகாமிட்டு தொழில் முதலீடு தொடர்பாக கூட்டத்தில் ஐடி மற்றும் தொழிற்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி பங்கேற்றார். இதனையடுத்து, நேற்று ஐதராபாத் திரும்பிய நிலையில் வீட்டில் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அவரைப் பரிசோதித்த அப்பல்லோ மருத்துவர்கள், அவர் அழைத்து வரப்பட்டபோதே பேச்சு, மூச்சற்ற நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் அவருக்கு வீட்டிலேயே பலத்த மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகள் செய்யப்பட்டன. ஆஅனால், சிகிச்சை பலனின்றி கவுதம் ரெட்டி பரிதாகமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2019 மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர்சி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுதம் ரெட்டி, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக திகழ்ந்து வந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!