
முதலமைச்சர் ஜெயலலிதாவைத்தான் பார்க்க வந்தாரோ என அப்போலோவுக்கு சிகிச்சைக்காக வந்த ஆந்திர அமைச்சரை முற்றுகையிட்டு சார் சார் எதாவது சொல்லிட்டு போங்க என செய்தியாளர்கள் முற்றுகையிட அய்யா சிகிச்சைக்கு வந்தேன் அம்மாவை பார்க்க இல்லை, என்று தெரித்து ஓடினார் ஆந்திர அமைச்சர்.
ஆந்திர அமைச்சர் சித்தராகவராவ் அப்பலோ மருத்துவ மனைக்கு இன்று வந்தார். உள்ளே சென்றவர் தனது போலீஸ் பாதுகாவலர்களுடன் வெளியே வர அவர் முதல்வரை பார்க்கத்தான் வந்துள்ளார் என நினைத்து அவரை முற்றுகையிட்டு போட்டி போட்டு செய்தியாளர்கள் பேட்டி கேட்டதும் பதறிப்போய் , ஐயா நான் சிகிச்சைக்கு வந்துள்ளேன் , அம்மாவை பார்க்க வரவில்லை ஆளை விடுங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். பிறகுதான் பத்திரிகையாளர்களின் பிடியில் இருந்து அவரது கார் விடுவிக்கப்பட்டது.