நீட் தேர்வுக்காக போராட்டம்…!!! – களத்தில் குதித்த அன்புமணி…!!

First Published Jul 21, 2017, 10:33 AM IST
Highlights
anbumani ramadoss protest for neet exam in chennai chepauk


நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை பாலாக்குகிறது என கூறி பாமகவினர் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின்படி படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஓர் அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நேற்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என தமிழக அமைச்சர்கள் டெல்லியில் பிரதமரை நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை பாலாக்குகிறது என கூறி பாமகவினர் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!