பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்... இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குவதாக கூறிய ஜிகே. மணி.

Published : May 28, 2022, 12:21 PM IST
பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்... இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குவதாக கூறிய ஜிகே. மணி.

சுருக்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக அன்புமணி ராமதாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக அன்புமணி ராமதாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பாமகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜிகே மணி இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜி.கே மணியின் பணியை பாராட்டி பாமக சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பின்னர் கட்சித் தலைவர் பதிவி அன்புமணி ராமதாசுக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஜிகே மணி நிலை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.  இந்நிலையில் 25 ஆண்டு காலம் கட்சியில் தலைவராக இருந்த ஜி.கே மணியில் தலைவர் பதவி பறித்து அன்புமணிக்கு வழக்கப்பட உள்ளதா, பாமகவிலும் வாரிசு அரசியல்தானா என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். 

இந்நிலையில்  சென்னை அடுத்துள்ள திருவேற்காட்டில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அதில் ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். நிறுவனத் தலைவர் ராமதாஸ் கட்சியின் தலைவர் ஜிகே மணி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் உரையாற்றிய ஜிகே மணி, இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

இது தமிழகமே எதிர்பார்க்கும் பொதுக்குழு கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சியை சீரமைப்பு செய்து இன்னும் வளர செய்ய இந்த அதி முக்கிய துவம் வாய்ந்த தீர்மானத்தை இதோ வாசிக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை பொறுப்பேற்க ஒருமனதாக தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார். மேலும் இத்தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானத்தை வரவேற்றனர். இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி இராமதாஸ் பொறுப்பேற்றார். இது பாமகவினர் மத்தியில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!