தன் சாதியை சொல்லவே அசிங்கப்பட்டவர்தான் அன்புமணி.. அவர் சத்திரியரா.? டாராக கிழித்த வன்னியர் கூட்டமைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2021, 6:46 PM IST
Highlights

உங்கள் மகன் அன்புமணி ராமதாஸ் சத்ரியரா? என்றைக்காவது உன் மகன் சாதியைச் சொல்லி இருக்கிறாரா? 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது அப்போது முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன் நிறுத்தப்பட்டார். 

சாதி சாதி என்று பேசும் அன்புமணி தான், தான் ஒரு வன்னியர் என்று சொல்லவே தயங்கியவர் என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி விமர்சித்துள்ளார். ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தங்களுடைய சுய லாபத்திற்காக வன்னியர் சமூகத்தின் பெயரைக் கூறி, அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். வன்னியர்களே நீங்கள் ஆண்ட பரம்பரை ஆனால் இப்போது அடிமைப்பட்டு கிடக்கிறீர்கள்.  பாட்டாளி சொந்தங்களே தனக்கு துரோகம் செய்து விட்டனர் என ராமதாஸ் விரக்தியின் உச்சிக்கே சென்று பேசியுள்ள நிலையில் சி. என் ராமமூர்த்தி இவ்வாறு விமர்சித்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக  பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து. சமீபத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இன்னும் கூட பாமகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. அன்புமணியை போல ஒரு திறமைசாலி எவரும் இல்லை, ஆனால் அன்புமணியிடம் ஆட்சியைக் கொடுக்க தமிழக மக்கள் தயங்குகிறார்கள். நாம் யாருக்காக கட்சியை நடத்த வேண்டும்? ஒரேடியாக கட்சியை கலைத்து விடலாமா? நாம் யாருக்காக போராட்டம் நடத்தி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தோமோ அவர்களே தற்போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். 

மொத்தத்தில் நமது பாட்டாளி சொந்தங்களே நம்மை கைவிட்டுவிட்டார்கள். நமக்கு துரோகம் செய்து விட்டார்கள், பாட்டாளி சொந்தங்களே உங்கள் வீரம் எங்கே போனது, பாட்டாளி இளைஞர்களே உங்களை நம்பித்தான் பாமக என்ற கட்சி இருக்கிறது. ஒன்றை மட்டும் நான் கூறுகிறேன், நீங்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள். ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள். உங்கள் முன்னோர் படை நடத்தி பாராண்டவர்கள். மன்னர்களாக இருந்தவர்கள். அவர்களின் வழி வழியாக வந்த சிங்கக்குட்டிகள் தான் நீங்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து, செங்கோலை இழந்து, ஆட்சிக்கு வராமல் அடுத்தவர்களுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறிரீகள். நாம் தமிழகத்தை ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக வேண்டும், நீங்கள் ஒவ்வொரு வீடாக சென்று அம்மா ஓட்டு போடுங்க.. ஐயா ஓட்டு போடுங்க.. தம்பி தங்கைகளே ஓட்டு போடுங்கள் என்று கேளுங்கள். நிச்சயம் நாம் வெல்வோம், 60 இடங்களில் வெற்றி பெற்றால் நாம் அன்புமணியை முதல்வராக்கி விடலாம். சமூக வலைதள பரப்புரைகளை தீவிர படுத்துங்கள். இவ்வாறு பேசியிருந்தார்.

பெரும்பாலும் அவரது பேச்சு முழுவதும் அதிருப்தியின் வெளிபாடாக இருந்தது. இதை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் இராமமூர்த்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதன் விவரம் பின்வருமாறு:- மருத்துவர் ராமதாஸ் அன்புமணியை தோளில் சுமந்து கொண்டு முதல்வராக்க வேண்டும் என திரிந்து கொண்டிருக்கிறார். அது தான் இத்தனை விரக்திக்கும் காரணம். அன்புமணியை தூக்கிப் பிடிப்பதே அவரின் முழு நேர வேலையாக இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியில் எத்தனையோ திறமையானவர்கள் இருந்தாலும், அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர். இதைத்தான் இத்தனை ஆண்டு காலமாக அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். வன்னிய இளைஞர்களை பார்த்து உங்களுடைய புஜங்களை தட்டிக்கொண்டு, புஜங்களை உயர்த்திக் கொண்டு சத்திரியர்கள் என்பதை காட்டவேண்டும் என கூறுகிறார். நான் கேட்கிறேன், ராமதாசே நீங்கள் சத்ரியரா.?

உங்கள் மகன் அன்புமணி ராமதாஸ் சத்ரியரா? என்றைக்காவது உன் மகன் சாதியைச் சொல்லி இருக்கிறாரா? 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது அப்போது முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன் நிறுத்தப்பட்டார். அப்போது முதல்வர் வேட்பு மனு தாக்கலின் போது வேட்புமனு படிவத்தில் என்ன சாதி என்ற  பிரிவில் அவர் சாதி பெயரை குறிப்பிடவில்லை, கோடு போட்டு விட்டார். சாதியையோ அவர் குறிப்பிடவில்லை, அவர்தான் சத்ரியர் அவர்தான் சத்ரிய சமுதாயத்தினுடைய வாரிசா? 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை வந்தபோதே ஒளிப்பதிவாளர்களை வைத்துக்கொண்டு தான் அழுவது போல ஒரு நாடகத்தை பதிவு செய்து அதை பரப்பினார்.  கிளிசரினை கண்ணில் போட்டுக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடிப்பதுபோல நடித்தார். 10.5 சதவீதத்திற்கும் ராமதாசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.  நான் எத்தனை முறை அதற்காக நீதிமன்றத்தின் படியேறி சட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் வாயிலாக அழுத்தம் கொடுத்தவன் நான்தான். இப்போது அவர்கள் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள். இது அசிங்கம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
 

click me!