பொ.செ என்றால் ரத்தம் சூடேறும்.. ஒருங்கிணைப்பாளர் என்றால் கிழவியை கட்டி அழுத கதைதான்.. நாஞ்சில் சம்பத் நக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2021, 5:33 PM IST
Highlights

திராவிட இயக்கத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் என்று சொல்வதுதான் கம்பீரம். நான் 19 ஆண்டுகாலம் அதிமுகவில் பணியாற்றியவன், வைகோவை நாங்கள் எல்லோருமே பொதுச்செயலாளர்கள் என்றுதான் சொல்லுவோம். அதேபோல திமுகவில் பேராசிரியரை பொதுச்செயலாளர் என்றுதான் சொல்லுவோம், 

அதிமுக என்ற கட்சிக்கு பொதுச் செயலாளர்  என்பதுதான் கம்பீரமே தவிர, ஒருங்கிணைப்பாளர் என்பது கிழவியை கட்டி அழுதகதைதான் என அரசியல் விமர்சகர், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் அதிமுகவை நக்கலடித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை தயார் செய்ய வேண்டிய நேரத்தில் உட்கட்சி தேர்தல் என்று அறிவிக்கிறார்கள் என்றால், இவர்கள் கொஞ்சம்கூட ஞானம் அற்றவர்கள் என்றுதான் விமர்சிக்க தோன்றுகிறது என அவர் சாடியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற கையோடு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் அரியணை ஏறினார். அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுக இயங்கிவருகிறது. சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலா மீண்டும் கட்சியை கைப்பற்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் அவர், தனது ஆதரவாளர்களிடம் தொலைபேசியில் உரையாடி அதற்கான ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுபவர்கள் சசிகலாவை சந்திப்பவர்கள் என பட்டியலிட்டு அவர்கள் கழகத்தின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டுக்கும் குந்தகம் விளைவித்தார்கள் எனக்கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அதிமுகவை மீட்க வேண்டும் என்றால் பாஜக கூட்டணியில் இருந்து அது வெளியேற வேண்டும் என்றும், பாஜக கூட்டணியில் இருக்கும் வரை அதிமுக படுதோல்வியையே சந்திக்கும் என்றும் கட்சியின் தற்போதைய வீழ்ச்சிக்கு எடப்பாடிபழனிசாமி தான் காரணம் என்றும், எனவே சசிகலாவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பேசிவந்த நிலையில், அவர் கட்டம் கட்டப்பட்டு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு உள்ளார். இது தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் , ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இதுவரும் தங்கள் பதிவியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகிற 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். 

முன்னதாக கடந்த 1ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக சட்ட விதிகளில் முக்கிய திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்கில் இணைந்து தேர்வு செய்வார்கள் என்றும் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமானு கொடுத்துள்ளனர். அவர்களை எதிர்த்து இதுவரை எவரும் விருப்ப மனு கொடுக்கவில்லை. கொடுக்க வந்தவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர். அவசர அவசரமாக இபிஎஸ் ஓபிஎஸ் உட்கட்சி தேர்தல் நடத்துவது தங்களின் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கான சதி என்றும், இப்படி அவர்கள் நடந்து கொள்வது ஜனநாயக விரோதம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்சி கொடுத்துள்ள அரசியல் விமர்சகரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்பதே திராவிட இயக்கத்திற்கும் முரணானது.

திராவிட இயக்கத்திற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் என்று சொல்வதுதான் கம்பீரம். நான் 19 ஆண்டுகாலம் அதிமுகவில் பணியாற்றியவன், வைகோவை நாங்கள் எல்லோருமே பொதுச்செயலாளர்கள் என்றுதான்  சொல்லுவோம். அதேபோல திமுகவில் பேராசிரியரை பொதுச்செயலாளர் என்றுதான் சொல்லுவோம், பொதுச்செயலாளர் என்று சொல்லும்போது குருதி சூடாகும்.. உற்சாகம் தானாக வரும்.  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றால் கிழவியை கட்டி அழுத கதைதான். அது மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் எடுபடாது. இந்த பதவிகள் இயல்புக்கு மாறானது. அண்ணா திமுக தொண்டர்கள் மத்தியில் துணை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதெல்லாம் எடுபடாது. அது அவர்களுக்கே நன்கு தெரியும். அந்தக் கட்சிக்கு இன்றைக்கும் பொதுச்செயலாளர் சசிகலா தான். அவர் நேற்றுகூட இதுதொடர்பாக கம்பீரமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நிலைமைகள் மாறும் எல்லாம் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது தேர்தலே கிடையாது. இது ஒரு சீட்டாட்டம் போல ஒரு பிள்ளை விளையாட்டு. இந்தத் தேர்தல் எல்லாம் எடுபடாது. அதாவது அண்ணா திமுகவின் பொதுச்செயலாளர். அண்ணா திமுக தொண்டர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் சொல்லி விட்டு போயிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் அருகில் இருப்பவர்கள் எல்லாம் ஆதாய சூதாடிகள், எனவே பொதுச் செயலாளர் பதவியை அண்ணா திமுக தொண்டர்கள் தேர்வு செய்வார்கள்.  அதற்கான தேதியை சசிகலா ஒரு நாள் அறிவிப்பார். வாருங்கள் என்று அழைப்பார்கள், அன்று வெறிபிடித்தவர்கள் போல அதிமுக தொண்டர்கள் சீறி வருவார்கள். அன்று நடப்பதுதான் தேர்தல், இதெல்லாம் தேர்தலை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!