சிலர் போடும் பிச்சைக்காக வாழவேண்டுமா? அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் சுளீர்...

 
Published : Feb 17, 2017, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
சிலர் போடும் பிச்சைக்காக வாழவேண்டுமா? அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் சுளீர்...

சுருக்கம்

சிலர் போடும் பிச்சைக்காக வாழ வேண்டுமா என எம்.எல்.ஏக்கள் யோசிக்க வேண்டும் என்று அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யபட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். இது ஏற்புடையதாக இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து அதிமுக சட்டமன்றகுழு தலைவராக சசிகலாவை தேர்வு செய்ததற்கும் ஆனந்தராஜ் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் சசிகாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதையடுத்து அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.

எடப்பாடி பழனிசாமி 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு விட்டத்தின் பேரில் நாளை சிறப்பு சட்டப்பேரவை கூடுகிறது.

இந்நிலையில் நடிகர் ஆனத்தராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களின் விருப்பத்தை கேட்டு வாக்களிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்கும் அஞ்சாமல் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சிலர் போடும் பிச்சைக்காக வாழ வேண்டுமா என எம்.எல்.ஏக்கள் யோசிக்க வேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும். உண்மையான அதிமுகவினர் யார் என்று மக்கள் சொல்லட்டும் என ஆனந்தராஜ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு