திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன் - ஆனந்தராஜ் பேட்டி

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன் - ஆனந்தராஜ் பேட்டி

சுருக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆனந்த ராஜுக்கு தனிப்பட்ட நபர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாக, காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த ராஜ் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், மிரட்டல் விடுப்பவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார், வயோதிகம் காரணமாக ஏற்படும் மதிப்பின் அடிப்படையில் திமுக தலைவரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பற்றி ஆனந்த்ராஜ் பேட்டி:

மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பற்றி நடிகர் ஆனந்த்ராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து விலகியதற்காக என்னை மிரட்டுவது என்ன நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.   அதிமுகவுக்கு தான் எப்போதும்  அவப்பெயர் ஏற்படுத்தியது இல்லை  

கட்சியில் உள்ளவர்கள் யாரும் எனக்கு  மிரட்டல் விடுக்கவில்லை , ஒருவேளை அப்படி யாராவது இருந்தால் கட்சி தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். 

திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு 

 வயதின் மீதான அன்பின் காரணமாகவே திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பேன் என்று கூறிய அவர், அவரது உடல்நிலை குறித்து வாய்ப்பு கிடைக்கும் போது கேட்டறிவேன் என்று குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு