
மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் குழந்தை என்ற மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தக் குழந்தையை எடுத்து ஊட்டம் கொடுத்து வளர்த்தது, பாஜகவும், ஜெயலலிதாவும்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டம் தி.மு.க-வின் பிள்ளை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் உணர வேண்டும் அதிமுக, பெற்று எடுக்காத பிள்ளைக்குப் பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், கருணாநிதியின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க, அதற்கு வித்திட்டவர் ஜெயலலிதா என்று வடிகட்டிய பொய்யை மத்திய அமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர், அரசு விழாவில் அரசியல் நாகரீகத்தை பலி கொடுத்திருக்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்க்கு பதிலடி கொடுக்கு வகையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் அவர் தந்தையின் மூளையிலிருந்து பிறந்த குழந்தை என்று கூறியுள்ளார். ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தக் குழந்தையை எடுத்து ஊட்டம் கொடுத்து வளர்த்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மறைந்த ஜெயலலிதாவும்தான்” என்று டிவீட் செய்துள்ளார்.