வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதுமா..? எத்தனை நாளுக்கு இந்த அவலநிலை தொடரும்.. தினகரன் கேள்வி..

By Thanalakshmi VFirst Published Apr 22, 2022, 1:53 PM IST
Highlights

கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது, விஞ்ஞானத்தின் உதவியுடன் செயல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 

கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது, விஞ்ஞானத்தின் உதவியுடன் செயல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.மதுரையில் மின் மோட்டாரை பழுது பார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VGR என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது எம்.எஸ் காலணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்றிரவு சிவக்குமார் என்பவர் மின் மோட்டாரை பழுது பார்த்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் தவறுதலாக விழுந்துள்ளார். மேலும் அவர் சத்தம் போடவே, அவரை காப்பாற்ற அங்கிருந்த சரவணன், லட்சுமணன்  ஆகியோர் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினர். சிவக்குமாரை காப்பாற்ற முயன்ற போது அவர்கள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். இந்நிலையில் 3 பேரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் "மதுரை மாநகராட்சியின் கழிவு நீர் வெளியேற்றும் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த அவலநிலை தொடருமோ? 'கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது; விஞ்ஞானத்தின் துணைகொண்டு அதனை உடனடியாக செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை." என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: அதிர்ச்சி.. ! கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. மோட்டார் சரிசெய்த போது பரிதாபம்

click me!