பதவியை கூவிக் கூவி விற்கும் அமமுக... திக்கித் திணறும் டி.டி.வி.தினகரன்..!

Published : Dec 27, 2018, 10:27 AM ISTUpdated : Dec 27, 2018, 10:41 AM IST
பதவியை கூவிக் கூவி விற்கும் அமமுக... திக்கித் திணறும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமான பிறகு திக்கித் திணறி வருகிறது டி.டி.வி.தினகரனின் அமமுக. இருப்பவர்களை தக்கவைக்க ஒருபுறம் தகிடுதத்தோம் போட்டு வரும் நிலையில் பணம் இருப்பவர்களுக்கு பதவி கொடுத்து அரசியல் நடத்தும் நிலைக்கு வந்திருக்கிறது அந்தக் கட்சி. 

ஆர்.கே.நகரை வென்ற பிறகு அதிரடி9 அரசியல் தலைவராக உருவெடுத்தார் டி.டி.வி.தினகரன். இனி திமுகவுக்கும் அமமுகவுக்கும் தான் போட்டி என தமிழகம் முழுவதும் பரபரப்பு எழுந்தது. எல்லாம் சில காலம் தான். செந்தில் பாலாஜியை திமுக இழுத்த பிறகு திக்குமுக்காடி வருகிறது அமமுக. நாமக்கல் மாவட்டத்தில் அமமுகவினர், கட்சி பதவிகளை கூவிக்கூவி விற்பதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான முன்னாள் எம்பி எஸ்.அன்பழகனுக்கு மாவட்ட செயலாளர், அவைத்தலைவர் என்று அடுத்தடுத்து பதவி கொடுத்தார்கள். அவர், பழைய நண்பர்களான அதிமுகவினரை அமமுகவிற்கு கொண்டு வர, பலமான முயற்சிகளை செய்தார். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை. 

ஒரு கட்டத்தில் அன்பழகன் ஓரங்கட்டப்பட்டார். இதனால், புதியவர்களுக்கு மாவட்ட அளவிலான பதவி கிடைக்க ஆரம்பித்தது. தீபா கட்சியில் இருந்த ஒருத்தருக்கு மேற்கு, தேமுதிக முன்னாள் எம்எல்ஏவுக்கு கிழக்கு என்று மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விலை போட்டு, கூவி கூவி விற்பதாக கூறப்படுகிறது. இதனால், கையில் கொஞ்சம் ‘ப’ வைட்டமின் வைத்திருப்பவர்கள் எல்லாம் கரை வேட்டி கட்டிக்கொண்டு, அமமுக கட்சியின் கொள்கை வீரர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்கிறார்கள் அதிருப்தியில் உள்ள அமமுகவினர். 
 
PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்