
அம்மா வழியில் ஆட்சி என்று சொல்லும் அமைச்சர்களே உங்களுக்கு வேக்கமாவே இல்லையா? அம்மா இருந்திருந்தால் 13 பேர் காவு வாங்கப்படிருப்பார்களா? என எடப்பாடி அமைச்சர்களுக்கு தினகரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடரின்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசப்பட்டது. அப்போது முதல்வர் ஒரு நீண்ட அறிக்கையை வாசித்து தூத்துக்குடி மக்களை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக கூறியதாக தெரிகிறது என எடப்பாடியார் பேச, காலையில் காட்டமாக கருப்பு சட்டையோடு சபைக்குப் போன திமுக கொந்தளித்து வெளியேறியது.
டிடிவி தினகரன் சட்டசபைக்கு வெளியே பேசுகையில் சமூக விரோதிகள் நுழைந்ததை பார்க்காமல் தூங்கிவிட்டது அரசு. துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னாலே அரசுக்கு கோபம் வருகிறது. மக்கள் இடத்திலிருந்துதானே எதையும் சொல்ல வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொல்லாமல் எல்லாரும் கண்ணை மூடி படுத்துக் கிடக்கின்றனர் என்றா சொல்ல முடியும், சமூக விரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? காவல்துறை துணையின்றி அமைச்சர்கள் தூத்துக்குடிக்கு போக முடியுமா. ஏதேதோ போட்டோவைக் காட்டி முதல்வர் ஷோ காட்டி வருகிறார்.
ஆவூன்னா... அம்மா ஆட்சி.., அம்மா ஆட்சி... என வெளியில் கூறிவரும் அமைச்சர்களுக்கு வெட்கமாவே இல்லையா? நாக்கே கூசாமல் சொல்லும் உங்களுக்கு தெரியாதா? ஜெயலலிதா இருந்திருந்தால் 13 பேரை கொன்றிருப்பாரா? என காட்டமாக பேசினார் தினகரன்.