அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக செய்தி !! டி.டி.வி. கட்சி பிரமுகர் அதிரடி கைது !!

Published : Oct 27, 2018, 09:55 AM IST
அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக செய்தி !! டி.டி.வி. கட்சி பிரமுகர் அதிரடி கைது !!

சுருக்கம்

அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக  செய்தி வெளியிட்ட  அம்மா மக்கள் முன்னனேற்றக் கழக நிர்வாகி ரங்கநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அமைச்சர் ஜெயகுமார் மீது கடந்த வாரம் பாலியல் புகார் ஒன்று எழுந்தது. சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சிந்து என்ற பெண்ணை அமைச்சர் ஜெயகுமாருடன் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் பரபரப்பு புகார் எழுந்தது.

ஆனால் அது பொய்யான தகவல் என்றும், யாரோ எனது பெயருக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் மார்பிங் செய்து ஆடியோ வெளியிட்டுவிட்டததாக அமைச்சர் ஜெயகுமார் மறுத்தார். மேலும் இப்பிரச்சனையை சட்டப்படி சந்திப்பேன் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதே நேரத்தில் அமைச்சர் ஜெயகுமார் மீது சிந்து என்ற அந்தப் பெண் தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளித்துள்ளார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் அமைச்சர் ஜெயகுமாரை கிண்டல் செய்தும், மீம்ஸ் வெளியிட்டும் நெட்சன்கள்  கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில்  அமைச்சர் ஜெயகுமார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக  ஓமலூரை அடுத்த தாராபுரம் பகுதியிச் சேர்ந்த அம்மா மக்கன் முன்றேற்றக்கழக  நிர்வாகி ரங்கநாதன்  என்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!
வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி