அதிமுகவை தாக்கும் அமமுகவின் விளம்பரங்கள், திசை மாறுகிறதா டிடிவியின் அரசியல்?திமுகவின் B team டிடிவி?

Published : Mar 31, 2021, 01:48 PM IST
அதிமுகவை தாக்கும் அமமுகவின் விளம்பரங்கள், திசை மாறுகிறதா  டிடிவியின் அரசியல்?திமுகவின் B team டிடிவி?

சுருக்கம்

அமமுக  சார்பில் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு வரும் விளம்பரங்களை பார்த்தால் டிடிவியின் உள்நோக்கம் தெரிகிறது. அமமுகவின் தொலைக்காட்சி விளம்பரங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஓ.பி.எஸையோ மற்ற அதிமுகவினரையோ தாக்குவது போல காட்சிகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பொது எதிரியான திமுகவை வீழ்த்துவோம் என கூறிக்கொண்டிருந்த தினகரன், ஏன் முதல்வரை மட்டும் குறிவைத்து தாக்குகிறார் ? என்ற கேள்வி எழுகிறது. 

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னும் தனது அரசியல் பயணத்தை அமமுக மூலம் தொடர்ந்து கொண்டிருக்கும் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன். பொது எதிரியான திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் இருப்பதும் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்பதுமே அமமுகவின் நோக்கம் என தொடர்ந்து பேசி வந்தார். சசிகலாவின் அறிக்கைக்கும் தனது அரசியல் பயணத்திற்கும் தொடர்பு இல்லையென தெளிவுபடுத்தி பொது எதிரியான திமுகவை ஆட்சிக்கு அமைக்க விடாமல் இருப்பதே குறிக்கோள் என தொலைக்காட்சிகளில் பேட்டியும் அளித்தார். 

ஆனால் சமீபத்தில் அமமுக  சார்பில் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு வரும் விளம்பரங்களை பார்த்தால் டிடிவியின் உள்நோக்கம் தெரிகிறது. அமமுகவின் தொலைக்காட்சி விளம்பரங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஓ.பி.எஸையோ மற்ற அதிமுகவினரையோ தாக்குவது போல காட்சிகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பொது எதிரியான திமுகவை வீழ்த்துவோம் என கூறிக்கொண்டிருந்த தினகரன், ஏன் முதல்வரை மட்டும் குறிவைத்து தாக்குகிறார் ? என்ற கேள்வி எழுகிறது. 

மறைமுகமாக திமுகவிற்கு துணை நின்று அதிமுவை தோற்கடிக்க பார்க்கிறாரா? ஒருவேளை திமுகவின் B டீம் தினகரன் தானா? என்கிற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. தனது சித்தி கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும் என்று கூறிய பிறகும் தொடர்ந்து டிடிவி தினகரன் இதுபோல செய்து வருவது, திமுக ஆட்சிக்கு வர உதவுவதற்கு தானோ என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர். ஏற்கனவே அதிமுக தேர்தலில் தோற்றால் அதற்கு முழு காரணம் அமமுக தான் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது  எடப்பாடியை தாக்குவதன் மூலம் நேரடியாக திமுகவிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார் டிடிவி தினகரன்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!