அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்... போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்..!

Published : Jul 11, 2019, 05:19 PM IST
அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்... போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்..!

சுருக்கம்

அதிமுக - அமமுகவினர் இடையே பாளையங்கோட்டையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. 

அதிமுக - அமமுகவினர் இடையே பாளையங்கோட்டையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. 
 
பாளையங்கோட்டையில் அழகுமுத்து கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுகவினரும், அமமுகவினரும் மாலை அணிவிக்கும்போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். 

இந்த தகராறில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவருக்கும், அமமுகவைச் சேர்ந்த ஒருவருக்கும் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலில் ஈடுபட்ட இருகட்சியினரும், தங்கள் தலைமைக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!