MK Stalin: சிக்ஸர் அடித்த ஸ்டாலின்..! சைலண்ட் மோடில் அதிமுக.. சட்டப்பேரவை பரபரப்பு..!

By vinoth kumarFirst Published Jan 7, 2022, 12:14 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணிகளுக்கான அரசை பாராட்டிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு நன்றி. நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவிற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டப்பேரவை கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? 

அதிமுக ஆட்சியில் முந்தைய திமுக அரசின் திட்டங்களை புறக்கணித்ததுபோல புறக்கணிக்க மாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றி வருகிறார். எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும். ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை செயல்திட்ட அறிக்கையே. ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநரின் பாராட்டு உரை என்பது மக்களுக்கான பாராட்டு உரையாகும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி  தெரிவித்து கொள்கிறேன். கொரோனா தடுப்பு பணிகளுக்கான அரசை பாராட்டிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு நன்றி. நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவிற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். 

அப்போது, அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டோம், ஆனால் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலை படித்தார். இதுபோன்ற பட்டியல் என்னிடம் நிறையவே இருக்கிறது. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டப்பேரவை கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? கலைஞர் காப்பீடு திட்டத்தை மாற்றியது யார்? என அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அம்மா உணவகத்தை மூடக்கூடாது என்பதே எனது எண்ணம். அந்த முடிவில் எந்த மாற்றமும் ஏற்படாது. அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். அதிமுக ஆட்சியில் முந்தைய திமுக அரசின் திட்டங்களை புறக்கணித்ததுபோல புறக்கணிக்க மாட்டோம்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு. தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம்.  மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்பட வில்லை. உங்களின் அரசாக மட்டுமல்ல. உயிர்காக்கும் அரசாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மகளிருக்கு இலவச பயணச் சலுகை, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

click me!