எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது? பேரவையில் மாஸ் காட்டிய ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Aug 26, 2021, 4:06 PM IST
Highlights

விழுப்புரத்தில் அமையும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு  எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்பதற்கு அம்மா உணவகமே ஒரு சாட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அமையும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எதிர்கட்சித்தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என நினைத்திருந்தால் அம்மா உணவகம் அதேப் பெயரில் தொடந்திருக்காது. அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று கூறினார். 

இதனை ஏற்க மறுத்த அதிமுக  உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

click me!