
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக டெல்லியில் இருந்து அமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் நாளை சென்னை வர தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் ஆன நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழுவினரின் ம்ருத்தவ கண்காணிப்பில் உள்ள முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கேட்டறிந்து வருகின்றனர்.
புதுவை முதலமைச்சர் மற்றும் ஆளுநர், கேரள முதலமைச்சர் மற்றும் ஆளுநர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமானோர் மருத்துவமனை சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாளை டெல்லியில் இருந்து சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், தனியார் தொலைக்காட்சி ஒன்று கூறும்போது, அமித்ஷா மற்றும் அருண்ஜேட்லி ஆகியோர் நாளை சென்னை வர உள்ளதாக கூறினார்.
பிற்பகல் சுமார் 3 மணியளவில் அப்போலோ மருத்துவமனை சென்று முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார்.