அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்.. மருத்துவமனைக்கு நள்ளிரவில் வந்த அமித் ஷாவால் பரபரப்பு!

Published : Aug 17, 2019, 08:36 AM IST
அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்..  மருத்துவமனைக்கு நள்ளிரவில் வந்த அமித் ஷாவால் பரபரப்பு!

சுருக்கம்

அருண் ஜெட்லி கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அவரை மருத்துவமனை டாக்டர் குழு தீவிரமாகக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியை நேற்று பார்த்துவிட்டு திரும்பினார். 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில், நள்ளிரவில்மத்திய அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  
உடல்நிலை பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகஸ்ட் 9 அன்று அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெட்லி, அன்று முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பி அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு அவருடைய உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் மருத்துவமனை  தரப்பில் வெளியாகவில்லை.

 
இதற்கிடையே அருண் ஜெட்லி கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அவரை மருத்துவமனை டாக்டர் குழு தீவிரமாகக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியை நேற்று பார்த்துவிட்டு திரும்பினார். இந்நிலையில் நள்ளிரவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மருத்துமவனைக்குக்கு வந்தனர். இதனால். பரபரப்பு ஏற்பட்டது.


அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் இருவரும் கேட்டறிந்ததுவிட்டு சென்றனர்.  இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் மருத்துவமனைக்கு வந்து ஜெட்லியைப் பார்வையிட்டு சென்றார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!