ஏக் சாயா வித் ஹமாரா அமித்ஷா: கேண்டீனில் கட்சி வளர்க்கும் பி.ஜே.பி!

First Published Feb 27, 2018, 7:28 PM IST
Highlights
Amith sha open acnteen in delhi BJP office


கண் மூடி திறந்தால் இன்னும் சில மாதங்களில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறது பி.ஜே.பி. இதற்காக மற்ற கட்சியினரின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தங்களுக்கு ஆதரவாக இழுப்பது ஒரு புறம் என்றால் தங்கள் கட்சியின் தொண்டர்களை முழு உற்சாகமாக வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறது அக்கட்சியின் தலைமை. இந்த விஷயத்தில் அமித்ஷா அநியாயத்துக்கு ஆர்வம் காட்டுகிறாராம். 

இந்த சூழலில் டெல்லியில் பி.ஜே.பி.யின் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட இங்கு கேண்டீன் நடக்கும் பொறுப்பை டெல்லியை சேர்ந்த ஒரு பிரபல கேட்டரிங் டீமிடம் கொடுத்திருக்கிறார் அமித்ஷா. 

இந்த கேண்டினில் தேசத்தின் பல மாநில உணவுகள் நியாயமான விலையில் கிடைக்கிறதாம். இந்த அலுவலகத்துக்கு வரும்போதெல்லாம் அமித்ஷா மறக்காமல் அந்த கேண்டீனுக்கு செல்வதுடன், தலைமை நிர்வாகிகளிடம் ‘அடிக்கடி கேண்டீன் செல்லுங்கள். அங்கே இருக்கும் நம் தொண்டர்களுக்கு சாயா வாங்கி கொடுத்து உற்சாகமாக உரையாடுங்கள். ஏழை தொண்டர் உங்களுக்கு சாயா வாங்கிக் கொடுத்தால் மறுக்காமல் வாங்கி குடியுங்கள்.’ என்கிறாராம். 

அமித்ஷா இப்படி கோடு போட, அதை வைத்து ரோடே போடுகிறது பி.ஜே.பி.யின் நிர்வாகிகள் டீம். அதாவது, எதிர்வரும் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக ஆக்கப்பூர்வமாக என்னவெல்லாம் செய்யலாம்! என்பது குறித்து நிர்வாகிகளிடம் தொண்டர்கள் ஐடியாக்கள் கூறலாம். அது உண்மையிலேயே செம சூப்பரான ஐடியாவாக இருந்தால், அந்த தொண்டர் மட்டும் அதை கட்சி அலுவலக கேண்டினில் அமித்ஷா ஜியுடன் உட்கார்ந்து சாயா குடித்தபடி தாங்களே நேரடியாக விளக்கலாம்! எனும் ரீதியில் ஒரு பிளானை டிஸைன் செய்திருக்கிறார்களாம். 

இதற்கு ‘ஏக் சாயா வித் ஹமாரா அமித்ஷா’ என்று டக்கராக தலைப்பும் கொடுக்கப்போகிறார்கள். 

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், மோடி காஃபி குடித்தபடி நாடு முழுவதுமுள்ள சில டீ கடைகளில் சிட்டிசன்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கிள் உரையாடியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். 

டெல்லி பி.ஜே.பி. கட்சி வளர்ச்சிக்காக ஏதேதோ செய்து கொண்டிருக்க, தமிழக பி.ஜே.பி. தலைவர்களோ ‘மீடியா ஓனருங்க அழுகியே சாவாங்க.’ என்று சாபம் விடுவதில் பிஸியாக இருக்கிறார்கள். 

click me!