சந்திக்க மறுத்த அமித்ஷா... ஏமாற்றத்துடன் திரும்பும் தமிழக பாஜக எம்.எல்.ஏ.,க்கள்... பின்னணி என்ன..?

By Thiraviaraj RMFirst Published Jul 7, 2021, 11:45 AM IST
Highlights

கடந்த 3ம் தேதி தொடங்கி 4 நாட்கள் இந்த சந்திப்புகள் அடுத்தடுத்து நடந்தன. ஆனால் மத்திய உளதுறை அமைச்சரான அமைத்ஷாவை சந்திக்க 4 நாட்களாக தமிழக பாஜக எம்.எல்.ஏ.,க்கள் கடுமையாக முயற்சி செய்துள்ளனர். 

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் பாஜக உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.

 

தமிழகத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.,க்கள் முக்கிய தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசினார்கள். தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி ஆகிய நான்கு பேரும் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்களை சந்திக்க டெல்லி சென்றனர். அவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனும் சென்று இருந்தார். 

கடந்த 3ம் தேதி தொடங்கி 4 நாட்கள் இந்த சந்திப்புகள் அடுத்தடுத்து நடந்தன. ஆனால் மத்திய உளதுறை அமைச்சரான அமைத்ஷாவை சந்திக்க 4 நாட்களாக தமிழக பாஜக எம்.எல்.ஏ.,க்கள் கடுமையாக முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து கிரீன் சிக்னல் வரவில்லை. இதனால் தமிழக பாஜக எம்.எல்.ஏ.,க்களின் இந்த டெல்லி பயணம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

பின்னணியை விசாரித்தால் தமிழக தேர்தலின் போது தமிழக பாஜக தலைவர்கள் கொடுத்த பில்டப்தான் காரணம் என்கிறார்கள். அதற்காக பாஜக மேலிடம் கொடுத்த பணத்தை பதுக்கியதும்தான் அமித்ஷா பாஜக எம்.எல்.ஏ.,க்களை சந்திக்காததற்கு காரணம் என்கிறார்கள். ஆனால் மற்றொரு தரப்போ, அமைச்சரவை விரிவாக்கத்தில் பிஸியாக இருப்பதால் அமித் ஷா அவர்களை சந்திக்கவில்லை என்கின்றனர்.

click me!