ஓகே சொன்ன கே.சி.ஆர்.. ஹேப்பியான பிரசாந்த் கிஷோர்.! அப்போ காங்கிரஸ் கதி ‘அவ்ளோதானா’ ?

By Raghupati R  |  First Published Apr 25, 2022, 10:07 AM IST

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் ஆட்சியில் இருந்த பஞ்சாபிலும் தோல்வியை சந்தித்தது.


இதனால் கட்சியின் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சியை மறுசீரமைப்புக்கு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று நிலையில் கட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.நேற்று குஜராத்தில் பெரும்பான்மை பெற்ற பரிதார் சமூகத் தலைவரான நரேஷ் பட்டேலை டெல்லியில் சந்தித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

காங்கிரஸ் கட்சியில் இணையபோவதாக தகவல் வெளிவந்த நிலையில், 2023 சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக காங்கிரஸின் போட்டியாளரான கே.சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியுடன் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஐபேக் நிறுவனத்தில் பிரசாந்த் கிஷோர் இல்லை என்றாலும் தற்போதும் அது அவரது கட்டுப்பாட்டில், மேற்பார்வையில் தான் செயல்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் காங்கிரஸ் கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கொடுப்பது போல் மம்தா பேசினார். 

தற்போது சந்திரசேகர் ராவுடன் ஐபேக் நிறுவனம் இணைந்துள்ளதால் விரைவில் அவரிடமிருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கருத்துகள் வெளிவரலாம் என்கிறார்கள். தெலுங்கானாவில், காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  ஆனால், காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய இரு கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கிஷோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால், காங்கிரசுடனோ அல்லது சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியுடனோ கிஷோர் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட கூடிய சூழலும் காணப்படுகிறது.  இதனால் கிஷோருடனான கூட்டணியை, ராவ் முறித்து கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அல்லது, தனது ஐபேக் குழு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை கவனித்து கொள்ளும் என்றும் தான் அதில் இருந்து விலகி இருப்பேன் என்றும் கிஷோர் கூறலாம் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில், காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது பற்றி கிஷோர் ஆலோசனை வழங்கி உள்ளார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியோ அல்லது தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியோ இதனை ஏற்காது என கூறப்படுகிறது.  காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டிக்கும், கே.சி.ஆர் மற்றும் அவரது மகன் கே.டி. ராமராவுக்கும் இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.

இதனிடையே, அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல கூட்டங்களையும் ரெட்டி நடத்தியுள்ளார்.  ராகுல் காந்தியும் வருகிற மே 6ந்தேதி தெலுங்கானாவுக்கு வருகை தர திட்டமிட்டு உள்ளார்.  மிக பெரிய அளவில் அரசியல் கூட்டம் ஒன்றையும் நடத்த அவர் முடிவு செய்துள்ளார். இந்த பிரசாந்த் கிஷோர் - கே.சி.ஆர் கூட்டணி ஒரு புது கூட்டணியாக இருப்பதாலும், மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 2024 இல் பணியாற்றுவாரா ? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்து உள்ளது.

இதையும் படிங்க : நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !

click me!