மோடியை முகத்துக்கு நேர ட்ரம்ப் கேட்கபோகும் அந்த முன்று விஷயம்..!! பதற்றத்தில் கை பிசையும் பிரதமர்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2020, 3:51 PM IST
Highlights

மக்கள் தொகை கணக்கெடுப்பு என அடுத்தடுத்து பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கையால் இந்திய இஸ்லாமியர்கள் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை அடைந்துள்ளது . 
 

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய குடியுரிமை திருத்த சட்டம்  , இந்திய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட குடியுரிமை பிரச்சினைகள் குறித்து மோடியுடன் விவாதிக்க  வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப்  கூறிவந்த நிலையில் , தற்போது இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் அதிருப்தியை தெரிவித்துள்ளது . வரும்  24 மற்றும் 25 ஆகிய இரண்டு தினங்கள்  இந்தியாவில் அமெரிக்க அதிபர் மனைவி மகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . 

நாளை மறுதினம் இந்தியாவுக்கு வருகை தரும் ட்ரம்ப் இந்திய குடியுரிமை  திருத்தச் சட்டம்  குறித்து பிரதமரிடம் கேள்வி  எழுப்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .  இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி மக்கள் மத்தியில் உரையாற்றிய போது ,  நாட்டில் சிறுபான்மை மக்களின் உரிமைகள்  பாதுகாக்கப்படும்,  இனி வளர்ச்சியை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படோவேன்  என உறுதியளித்திருந்தார் அவரின் பேச்சுக்கு அப்போது அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது.  இந்நிலையில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து  மற்றும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்கும் வகையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ,  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ,  மக்கள் தொகை கணக்கெடுப்பு என அடுத்தடுத்து பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கையால் இந்திய இஸ்லாமியர்கள் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை அடைந்துள்ளது . 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அமெரிக்க அமைச்சர்கள் இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் நாடற்றவர்களாக  மாற வாய்ப்புள்ளது  எனவே இதில் அமெரிக்கா தலையிட வேண்டுமென அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளனர் .  இந்நிலையில் அமெரிக்க அதிபர் இந்தியாவரவுள்ள நிலையில் அவர் பிரதமர் மோடியிடம் காஷ்மீர் மற்றும் குடியுரிமை பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவார் என  கூறப்படுகிறது அதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு  அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது .  ஏற்கனவே இந்திய  குடியுரிமை சட்டங்கள் குறித்து கருத்து கூறிய மலேசியா  பிரதமர் மற்றும்  துருக்கு அதிபருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது .
 

click me!